இரத்தக் கண்ணீர் (Blood Tears)

Saturday 8 February 2014
For those who can read Tamil, I do not claim to have perfect Tamil, however I have tried. This is a poem about a person trapped in what seems to be a prison but drifts in and out of imagination. There is some word play in this poem that may be difficult to understand. 

வானத்தில் சூரியன், ஆள்  நடமாற்றம் கூடும்,
ஜன்னல் இல்லாத உலகத்தில், கூரை போன்று மூடும்.
சூரியன் தூங்கும் போது, ஒரு குரல் 'நிலா' என்று கூறும்,
மனதின் தனியான அழுகை, சத்தம் இல்லாமல் கேட்கும்.

நதியின் கரையில் நின்றும், ஆறுக் காணவில்லை,
நேரம் இல்லாத அறையில், மணி ஒண்றும்  இல்லை.
மாதுளை மரம் மேல், கிழவன் போல் பிள்ளை,
கண்களை திறக்கும் போது, இரத்தம்,கெம்புவின் உண்மை.

நான்கு பக்கம் சுற்றி,  என் கனவு கண்ணீர்வடியும்,
இந்த இருட்டில் எழுதும் கவிதை, நான் மனதில் வாழும் இடம்.
சிலைப் போல் நின்று, அசையாமல், பைத்தியம்,
 நான் வாழும் நரகத்தில், என் கற்பனைதான் பயம்.